shadow

விஜயகாந்த் கிங் ஆக இருப்பதைவிட ஜெயலலிதா குயின் ஆக இருப்பதுதான் நல்லது. தமிழருவி மணியன்

tamilaruviவிஜயகாந்த் கிங் ஆக இருப்பதைவிட ஜெயலலிதா குயின் ஆக தொடர்வதே நல்லது என மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

பிரபல தினசரி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்தை சேர்ப்பதில் தவறில்லை. ஆனால் அவரை முதல்வர் வேட்பாளராக நான் ஏற்க மாட்டேன்.

திமுக, அதிமுக போலவே குடும்ப அரசியல், கட் அவுட் கலாச்சாரம், தனி மனித துதி ஆகியவற்றில் தேமுதிக சற்றும் குறைந்தது அல்ல.

திமுக கூட்டணி பலம் இழந்து இருப்பதாலும், எல்லா கட்சித்தலைவர்களும் முதல்வர் கனவில் உள்ளதாலும் இந்த தேர்தலும் அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்றே கருதுகிறேன்.

திமுக – காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறாது. திமுகவினரின் விளம்பரங்கள் மக்களிடம் வெறுப்பைத்தான் உருவாக்கும்.

பாமக மீது தலித் விரோத கட்சி என்ற முத்திரை உள்ளதால் பாமக வெற்றி சாத்தியம் இல்லாதது.

நாங்கள் இந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். தொகுதிக்கு 2 ஆயிரம் ஓட்டு வாங்கவில்லை என்றால் அரசியலில் இருந்து விலகிவிடுவேன்.

Leave a Reply