shadow

இஸ்தான்புல் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்.. 36 பேர் பலி. 147 பேர் காயம்
istanbul
உலகின் பிசியான விமான நிலையங்களில் ஒன்றான துருக்கி நாட்டின் இஸ்தான்புல் விமானநிலையத்தில் தற்கொலைப்படையினர்களின் திடீர் தாக்குதலுக்கு  36 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 147 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.         

இஸ்தான்புல் நகரின் அடாடர்க் விமான நிலையத்திற்கு நேற்றிரவு 10 மணியளவில் காரில் வந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக விமானத்திற்காக காத்திருந்த பயணிகளை கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். பின்னர்  விமானநிலையத்தில் 3 இடங்களில் தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். இந்த தாக்குதலில்  வெளிநாட்டை சேர்ந்த பயணிகள் உள்பட 36 பேர் பலியாகினர்.  இதுவரை 147 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலையடுத்து தற்போதைக்கு விமான நிலையம் மூடப்பட்டது. ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் முக்கிய நகரமான இஸ்தான்புல்லில் இருந்து விமானங்கள் அனைத்தும் திருப்பி விடப்பட்டுள்ளன.

ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ இயக்கத்தினர் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டபோதிலும் இதுவரை எந்த இயக்கமும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. இஸ்தான்புல்லில் இந்த ஆண்டு நிகழ்த்தப்படும் 4வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலில் இந்தியர்கள் யாரும் பாதிப்படையவில்லை என துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

istanbul 1 istanbul 2 istanbul 3 istanbul 4 istanbul 5 istanbul 6

Leave a Reply