shadow

31 சாட்டிலைட்டுகளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி–38

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று காலை 9.29 மணிக்கு வெற்றிகரமான பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட்டை விண்ணில் ஏவி சாதனை புரிந்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் ஏவுகணைதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட்டில் மொத்தம் 31 செயற்கைக் கோள்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பெல்ஜியம், செக் குடியரசு, பின்லாந்து, பிரான்சு, இத்தாலி, லாத்விகா, லிதுவேனியா, சிலி, ஜெர்மனி, ஸ்லோவாகியா, பிரிட்டன், மற்றும் அமெரிக்கா உள்பட 14 நாடுகளின் 30 சாட்டிலைட்டுகளும் இந்தியாவை சேர்ந்த நானோ சாட்டிலைட் என மொத்தம் 31 சாட்டிலைட்டுக்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இன்று அனுப்பப்பட்ட மொத்த சாட்டிலைட்டுகளின் எடை 955 கிலோவாகும்.

இன்று விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக் கோள்களில் ஒன்று தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நூருல் பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்டது. NIUSAT எனப்படும் அந்த சாட்டிலைட் பயிர்களைக் கண்காணிக்கும். தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமெரிக்கா உள்பட 14 நாடுகளின் 29 சாட்டிலைட்டுகளுடன் இந்த சாட்டிலைட்டும் விண்ணில் ஏவப்பட்டது. ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

Leave a Reply