shadow

இஸ்ரோவின் 100வது செயற்கைகோளும், தலைவராகும் தமிழரும்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் தலைவராக தமிழர் சிவன் என்பவர் இன்று பதவியேற்க உள்ள நிலையில் இன்று இஸ்ரோவின் 100வது செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பிஎஸ்எல்வி சி 39 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய இஸ்ரோ, நான்கு மாத இடைவெளிக்குப் பின்னர், இஸ்ரோ தற்போது, பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது. இதன்மூலம், தனது 100ஆவது செயற்கை கோளை, சுற்றுவட்டப்பாதையில் இஸ்ரோ நிலைநிறுத்த உள்ளது.

4 எரிபொருள் நிலைகளைக் கொண்ட இந்த பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டை ஏவ, ஏறத்தாழ இரண்டு முறை அதன் இயக்கத்தை நிறுத்திவைத்து மீண்டும் விண்ணில் செலுத்தும் நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. கார்டோ சாட்-2S தொடரின் அடுத்த (Cartosat-2S series) செயற்கைக் கோள், வெளிநாடுகளின் 28 செயற்கை கோள்கள், ஒரு நானோ செயற்கைகோள், ஒரு சிறிய செயற்கைகோள் உட்பட 31 செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட் மூலம் செலுத்தப்படுகின்றன. ராக்கெட் புறப்பட்ட 8 நிமிடம் 21 வினாடிகளில், நான்காம் நிலையில் உள்ள என்ஜின் இயக்கப்படும்.

Leave a Reply