shadow

தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

தென் ஆப்பிரிக்கா பிரேசில் ஹாங்காங் உள்ளிட்ட ஒருசில நாடுகளில் மிக வேகமாக ஒமைக்ரான் பரவி வருவதால் வரும் டிசம்பர் மாதம் இஸ்ரேலில் நடத்த திட்டமிட்டுள்ள மிஸ் யுனிவர்ஸ் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் திட்டமிட்டபடி மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெறும் என அந்நாட்டின் சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அழகிகள் அனைவரும் தனியாக தங்க வைக்க ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்