shadow

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இந்தியா செல்ல வேண்டாம். இஸ்ரேல் எச்சரிக்கை

இன்று நள்ளிரவு இந்தியா உள்பட உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட உள்ளது. 2017ஆம் ஆண்டை வரவேற்க அனைவரும் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியா செல்ல வேண்டாம் என்றும், குறிப்பாக இந்தியாவின் தென்மேற்கு பகுதிகளில் இஸ்ரேலியர்கள் உள்பட வெளிநாட்டினர் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இஸ்ரேல் நாடு எச்சரித்துள்ளது.

மேலும் இந்தியாவில் தங்கியுள்ள இஸ்ரேலியர்கள் இன்று நள்ளிரவு  மால், மார்க்கெட், பீச் உள்ளிட்ட பகுதிகளில் நடமாட வேண்டாம் என்று இஸ்ரேல் நாட்டின் பிரதம மந்திரி அலுவலகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தாக்கப்படுவதற்கான  காரணங்கள் குறித்து எதுவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

Leave a Reply