shadow

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: புனே அணிக்கு மேலும் ஒரு வெற்றி

isl8 அணிகள் இடையிலான 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியின் லீக் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வெறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று புனேவில் நடந்த ஒரு போட்டியில் புனே-கொல்கத்தா அணிகள் மோதின

இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஆக்ரோஷமாக விளையாடிய புனே வீரர்கள் 41வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டனர். ஆனால் ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் கொல்கத்தா பதில் கோல் போட்டு சமன் ஆக்கியத்.

இந்நிலையில் 69வது நிமிடத்தில் புனே அணிக்கு கிடைத்த பெனால்ட்டி கார்னர் மூலம் கொல்கத்தா வீரர் இயான் ஹியூம் (கனடா) கோலை நோக்கி அடித்தார். இந்த கோலுக்கு பதில் கோலை போட கொல்கத்தா பெரும் முயற்சி அடைந்தும் கடைசி வரை முடியாததால், இறுதியில் புனே அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

நாளை கொச்சியில் நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் சந்திக்கின்றன.

Leave a Reply