shadow

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி. கேரளாவை வென்று முதலிடத்தை பிடித்த டெல்லி

isl-footballகடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் டெல்லியில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் கேரளாவை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சொந்த மண்ணின் ரசிகர்களை டெல்லி அணி மகிழ்வித்தது.

ஆரம்பம் முதலே இரு அணிகளும் நேற்று ஆக்ரோஷமாக ஆடினாலும் ஆட்டத்தின் 55வது மற்றும் 60 நிமிடங்களில் டெல்லி வீரர்கள் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட்டதால் கேரளா அணி நிலை தடுமாறியது.

இரண்டு பதில் கோல்களை போட்டு ஆட்டத்தை டிரா ஆக்க கேரளா எடுத்த முயற்சி கடைசி வரை எடுபடாததால் இறுதியில் டெல்லி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் டெல்லி அணி 13 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்று இரவு 7 மணிக்கு கவுகாத்தியில் நடக்கும் ஆட்டத்தில் கவுகாத்தி-மும்பை அணிகள் மோதுகின்றன.

Leave a Reply