ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி. சென்னை-மும்பை மோதிய ஆட்டம் டிரா.

1சென்னையில் நேற்றிரவு நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 1-1 என்ற கோல்கணக்கில் டிராவில் முடிந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் சென்னை அணியின் பெலுசோ கோலை நோக்கி அடித்த பந்தை சக வீரர் ஜெஜெ லால்பெகுலா தலையால் முட்டி ஒரு கோல் அடித்தார். இதனால் சென்னை அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தது.

ஆனால் ஆட்டத்தின் 88-வது நிமிடத்தில் மும்பை அணி வீரர் லியோ கோஸ்டா (பிரேசில்) இடது காலால் அடித்த பந்து கம்பத்தில் பட்டு கோல் ஆகியது. இதன் பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இறுதியில் ஆட்டம் டிரா ஆனது.

இன்று புனேயில் நடைபெறும் 29-வது லீக்கில் எப்.சி.புனே சிட்டி-எப்.சி.கோவா அணிகள் மோதுகின்றன.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *