footballஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்றைய போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், கோவா எப்.சி. அணியும் மோதியது. இந்த விறுவிறுப்பான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

கோவாவில் நேற்று நடைபெற்ற  இந்த போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் பி.சிங் 32-வது நிமிடத்திலும், ஆர்.இளங்கோ 42-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கோவா தரப்பில் 65-வது நிமிடத்தில் கிரிகோரி கோல் அடித்தார்.

இந்த வெற்றியின்மூலம் 3 புள்ளிகள் பெற்ற சென்னை அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

இந்த தொடரில் கொல்கத்தா, சென்னை, ஆகிய இரு அணிகளும் 3 புள்ளிகளை பெற்றுள்ளது. இருப்பினும் கொல்கத்தா 3 கோல்களும், சென்னை இரண்டு கோல்களும் போட்டுள்ளதால் சென்னை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. மும்பை அணி மூன்று கோல்கள் வாங்கி கடைசி இடத்தில் உள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *