shadow

isisஈராக் மற்றும் லிபியாவில் தீவிரவாத செய்கையில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினர்களின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் ஈராக்கின் அன்பார் என்ற மாகாணத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை அவர்கள் உயிருடன் எரித்துக் கொலை செய்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈராக்கின் மேற்கு பகுதியில் உள்ள அன்பார் மாகாணத்தில் சுமார் 30 முதல் 45 அதிகாரிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரமான முறையில் எரித்துக் கொன்றதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறையில் தலைமை அதிகாரி கர்னல் காஸிம் அல்-ஒபைதீ தெரிவித்ததாக தனியார் நிறுவன தொலைக்காட்சி செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

எரித்துக் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் சன்னிப் பிரிவு முஸ்லீம் இனத்தை சேர்ந்தவர்கள் என்றும் என்றும் அதில் பெரும்பாலானோர் காவல்துறையை மற்றும் ஈராக் அரசின் சாவா துணை காவல்படையை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் காரணமாக அன்பார் மாகாணத்தில் உள்ள அயீன் அல் ஆசாத் விமானத் தளத்தில் 300க்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஈராக்கின் பெரும் பகுதிகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்  ஆக்கிரமித்துள்ளதை தொடர்ந்து அமெரிக்கப் படைகள் அங்கு அதிரடியாக தீவிர தாக்குதல் நடத்த முகாமிட்டுள்ளனர்.

இதைத் தவிர சாவா துணை காவல்படை, பாதுகாப்புப் படை வீரர்கள் குடும்பத்தினர் நூற்றுக்கணக்கானோரை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களது வசத்தில் வைத்துள்ளதாகவும் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் மறுக்கப்பட்டு வருவதாக கர்னல் காஸிம் அல்-ஒபைதீ தெரிவித்துள்ளார்.

Leave a Reply