இலங்கையில் விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவராக இருந்த இசைப்பிரியா, பின்னர் சிங்கள் ராணுவத்தால் அவமானப்படுத்தப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். சமீபத்தில் அவரை சிங்கள ராணுவத்தினர் நிர்வாணமாக பிடித்து இழுத்து வந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவரது வாழ்க்கையை மையமாக வைத்து ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்னும் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கணேசன் இயக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இசைப்பிரியாவின் பாத்திரத்தில் அனு என்ற நடிகை நடித்துள்ளார். இவர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘இசைப்பிரியாவை பற்றி செய்திகளிலும், இணையதளங்களிலும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் கேரக்டரில் நடிக்கும் எனக்கே அவர் அனுபவித்த கொடுமைகளை நினைத்தால் மனம் பதபதைக்கிறது. அப்படியெனில் உண்மையிலேயே அனுபவித்த அவருக்கு எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை’ என்று கூறினார்.

இந்த படத்தில் மிக உருக்கமான ஒரு பாடலை இளையராஜா பாடியிருக்கின்றார். அந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்படும்போது படக்குழுவினர் அனைவரும் கண்கலங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த படம் வரும் மார்ச் மாத இறுதியில் வெளிவரும் என இயக்குனர் கணேசன் கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *