சென்னை தியேட்டரில் ‘வேதாளம்’ படத்தை பார்த்த விஜய்க்கு மிரட்டலா? பெரும் பரபரப்பு
theri
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஒருசில பெண்டிங் காட்சிகளும் பேட்ச்வொர்க் பணிகளும் மட்டுமே உள்ள நிலையில் இந்த படம் குறித்து வதந்தி ஒன்று மிக வேகமாக வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது.

அதாவது சென்னை சத்யம் தியேட்டரில் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றதாகவும், அதில் விஜய்யும் சமந்தாவும் சத்யம் தியேட்டரில் அஜித்தின் ‘வேதாளம்’ படத்தை பார்ப்பது போல ஒரு காட்சி இருப்பதாகவும், அப்போது விஜய்க்கு மொபைல் போனில் வில்லனிடம் இருந்து ஒரு அழைப்பு வருவதாகவும், சத்யம் திரையரங்கின் கார் பார்க்கிங் அருகே அஜித்தின் கட்அவுட் முன்பு வில்லன் நின்று கொண்டு விஜய்க்கு சவால் விடுவது போன்ற காட்சியும் உள்ளதாம்.

அப்போது வில்லன் விஜய்யிடம், தமிழ்நாடு போலீசில் இருக்குற ஒருத்தனாலும் என்னை பிடிக்க முடியாது, மீறி நீ தலையிட்டே அடுத்த 24 மணிநேரத்துல உங்க டிப்பார்ட்மெண்டல இருக்குற ஒவ்வொரு தலையா தெறிக்கவிடறேன் பாரு என்று மிரட்டுவதாகவும் ஒரு காட்சி உள்ளதாம். இந்த தகவல் வாட்ஸ் அப்பில் பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து படக்குழுவினர்களிடம் கேட்டபோது, ‘தெறி’ படத்திற்காக எந்தவொரு காட்சியையும் சத்யம் திரையரங்கில் படமாக்கவில்லை என்று கூறுகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *