இலங்கை: வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் திடீர் நீக்கமா? அதிர்ச்சி தகவல்
vigneshwaran- sambantham
இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் பதவியில் இருந்த விக்னேஸ்வரன் அதிரடியாக நீக்கப்பட்டதாக இலங்கையின் ஒருசில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
 

“கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய சில கருத்துகள் மற்றும் அவரின் சில நடவடிக்கைகள் சம்பந்தமாக சில கேள்விகள் எழுப்பப்பட்டது உண்மைதான் என்றும் ஆனால் அதுகுறித்து அவரிடம் நாங்கள் இன்னும் பேசவில்லை என்றும் இனிமேல்தான் அவரிடம் பேசவிருப்பதாகவும் கூறினார். மேலும் விக்னேஸ்வரனை கட்சியிலிருந்து நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி தவறானது என்றும் பேச்சுவார்த்தைக்கு பின்னரே எதுவும் முடிவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயினும் இலங்கையில் உள்ள தமிழ் ஊடகங்கள், தமிழ் இணையதளங்கள் விக்னேஸ்வரன் நீக்கிவிட்டதாகவே தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *