shadow

sridivyaஸ்ரீதிவ்யாவின் பிறந்தநாள் குழப்பம்

பிரபல நடிகர் கார்த்தி மற்றும் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ஆகியோர் இன்று வெகுசிறப்பாக பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் பிரபல நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கும் இன்றுதான் பிறந்த நாள் என்று செய்தி வெளியாகி அவருடைய ரசிகர்களும் ஸ்ரீதிவ்யாவுக்கு வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஸ்ரீதிவ்யா இன்று தனக்கு பிறந்த நாள் இல்லை என்றும் தனது உண்மையான பிறந்த நாளை பிறந்த நாள் நவம்பர் 30 என்றும் டுவிட்டரில் கூறியுள்ளார்.

ஆனால் ஸ்ரீதிவ்யாவின் விக்கிபீடியா பக்கத்தில் மே 25 என இன்றுதான் அவருடைய பிறந்த நாளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீதிவ்யா சொல்வது உண்மையா? அல்லது விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது உண்மையா என்று புரியாமல் அவருடைய ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Leave a Reply