shadow

thoongavanamகமல்ஹாசன் நடித்து வரும் ‘தூங்காவனம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதால் இந்த படத்தின் செய்திகளும் விறுவிறுப்பாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. வேட்டையாடு விளையாடு’ படத்திற்கு பின்னர் கமல்ஹாசன் நடிக்கும் போலீஸ் திரைப்படம் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘தூங்காவனம்’ படம் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்லிப்லெஸ் நைட்’ என்ற படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது. பிரெஞ்ச் மொழி திரைப்படமான ஸ்லீப்லெஸ் நைட்’ படத்தில் ஹீரோ போலீஸுக்கும், கிரிமினல்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பை மையமாக வைத்து விறுவிறுப்பான திரைக்கதையுடன் தயாரிக்கப்பட்டிருக்கும். இந்த படத்தின் கதையைத்தான் தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்து கமல்ஹாசன் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், யூகிசேது, சம்பத்குமார் உள்பட பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்தை ராஜேஷ் எம்.செல்வா இயக்கி வருகிறார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Leave a Reply