shadow

பிக்பாஸ் நிகழ்ச்சியா? விஸ்வரூபம் 2′ புரமோஷனா?

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்சன் பிராசஸ் உள்பட பல சுவாரஸ்யமான காட்சிகளை காண நேயர்கள் தொலைக்காட்சி முன் குவிந்து இருந்தனர். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் பாதி நேரத்திற்கு மேல் விஸ்வரூபம் 2′ திரைப்படத்தின் புரமோஷனுக்கு கமல் இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி கொண்டதாக சமூக வலைத்தளங்களில் அதிருப்தி கருத்துக்கள் பதிவாகி வருகின்றது

மேலும் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை விட இந்த இரண்டாம் சீசனில் கமல்ஹாசனின் சொந்த புராணங்கள், தற்பெருமை மிக அதிகமாக இருப்பதால் பார்வையாளர்கள் எரிச்சல் அடைந்து வருகின்றனர். நிகழ்ச்சியின் இடையே சம்பந்தமே இல்லாமல் கமல் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை கூறி தான் எந்த அளவுக்கு யோக்கியன் என்பதை வெளிக்காட்டி வருகிறார்.

இதனால் எப்போதும் ஞாயிறு நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சி மிகவும் சோர்வுடன் முடிந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கமல்ஹாசனை பார்க்க நேயர்கள் விரும்புகிறார்களே தவிர, கமலின் சுயபுராணத்தின் இடையே பிக்பாஸ் நிகழ்ச்சியை யாரும் காண விரும்புவதில்லை என்பதை கமல் புரிந்து கொண்டால் நல்லது

Leave a Reply