‘பைரவா’ படத்தின் கதை கசிந்தது. அதிர்ச்சியில் படக்குழுவினர்

இளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ படம் வரும் பொங்கல் திருநாளில் வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் கதை இணையதளத்தில் கசிந்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

விஜய் மற்றும் சதீஷ் வங்கியில் லோன் பிரிவில் பணிபுரிகின்றனர். வங்கியின் மேனேஜர் தனது மகளின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கின்றார். அந்த திருமணத்தில் கலந்து கொள்ளும் விஜய், தற்செயலாக கீர்த்தி சுரேஷை பார்த்து காதல் கொள்கிறார்.

பின்னர் ஒரு கட்டத்தில் விஜய் தன்னுடைய காதலை வெளிப்படுத்தியபோது கீர்த்தி சுரேஷ் அதனை மறுக்கின்றார். மருத்துவக்கல்லூரியில் படிக்கும் தான் ஒரு பிரச்சனையில் சிக்கி இருப்பதாகவும், அந்த பிரச்சனையில் இருந்து வெளியே வரும் வரை தன்னால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாது என்றும் கீர்த்திசுரேஷ் கூறுகின்றார்.

உடனே விஜய், கீர்த்திசுரேஷின் பிரச்சனையை சந்திக்க முடிவு செய்கிறார். அந்த பிரச்சனை என்ன? அதை விஜய் சரிசெய்தாரா? கீர்த்திசுரேஷை கைப்படித்தாரா? என்பதுதான் இந்த படத்தின் கதையாம்.

இப்படி ஒரு செய்தி டுவிட்டரில் மிக வேகமாக பரவி வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *