shadow

திருமணத்திற்கு தமன்னா தயாராகிறாரா?

கடந்த ஆண்டு தமன்னா நடிப்பில் ‘பாகுபல் 2’ மற்றும் சிம்புவின் ‘AAA’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வந்தது. இரண்டிலும் தமன்னா நாயகி என்று சொல்ல முடியாத அளவுக்கு மிகவும் குறைவான காட்சிகளில் தான் வருவார்.

அதேபோல் இந்த ஆண்டு அவர் ‘கண்ணே கலைமானே’ என்ற தமிழ்ப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் சிரஞ்சீவ்யின் நரசிம்ம ரெட்டி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒருசில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் அதனை தமன்னா தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமன்னா கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு திருமணத்திற்கு தயாராகவிருப்பதாகவும், அவரது பெற்றோர்கள் தமன்னாவுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை தமன்னா மறுக்கவும் இல்லை, உறுதி செய்யவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply