kamal and sivakarthikeyanமான் கராத்தே படத்திற்கு பின்னர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்திற்கு ‘டாணா’ என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் பெயரை மாற்ற இயக்குனர் முடிவு செய்துள்ளார். கமல் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘காக்கி சட்டை’ பெயரை இந்த படத்திற்கு வைக்க இயக்குனர் விரும்பியுள்ளார். இதற்கு கமல்ஹாசனிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனும் ‘டானா’ படத்தின் கதையை கேட்டுவிட்டு தனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்றும், முறைப்படி சத்யா மூவீஸ் ஆர்.எம்.வீரப்பன் அவர்களிடம் அனுமதி வாங்கிக்கொள்ளும்படியும் அறிவுரை கூறினார்.

சிவகார்த்திகேயன் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடிப்பதால் இந்த படத்திற்கு காக்கி சட்டை என்ற பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும் என படக்குழுவினர் கருதுகின்றனர். இந்நிலையில்கமல் நடித்த காக்கி சட்டை படத்தின் ரீமேக்தான் இந்த படம் என்று இணையதளங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு விளக்கம் அளித்த இயக்குனர் செந்தில்குமார், “இந்த படத்தின் கதைக்கும் காக்கி சட்டை படத்தின் கதைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், இந்த கதை தமிழில் இதுவரை சொல்லப்படாத வித்தியாசமான போலீஸ் கதை என்றும் இயக்குனர் கூறுகிறார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *