shadow

vedhalamகடந்த தீபாவளி தினத்தில் தல அஜித் நடித்த ‘வேதாளம்’ திரைப்படம் வெளியாகி ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பதை அனைவரும் அறிவர். ஆனாலும் இந்த படத்தின் இயக்குனரான சிறுத்தை சிவா மனவருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

‘வேதாளம்’ படத்தை இயக்கியதற்கான சம்பளப்பணத்தை தனக்கு தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் செட்டில் செய்யவில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறு சிவா வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அஜீத் தற்போது அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருப்பதால் அவருக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் சிவா உள்ளாராம். ஆனாலும் பத்திரிகை வாயிலாக இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அஜீத் மிகவும் வருத்தம் அடைந்ததாகவும் விரைவில் சிறுத்தை சிவாவின் சம்பளம் கிடைக்க வழிவகை செய்வார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply