shadow

rajini and dhanushபாலிவுட்டில் அமிதாப், தனுஷ் மற்றும் அக்ஷராஹாசன் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஷமிதாப்’ படம் ரஜினியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக  பரபரப்பு தகவல் இன்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

இன்று ‘ஷமிதாப்’படம் சென்சார் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் கதை தற்போது இணையதளங்களில் கசிந்துள்ளது. ரஜினியின் வாழ்க்கை சம்பவங்கள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சாதாரண கண்டக்டராக இருந்த ரஜினி, சினிமாவுக்கு வந்து சூப்பர் ஸ்டாராக மாறினார் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் ஷமிதாப் படத்தில் பஸ் கண்டக்டராக இருக்கும் தனுஷுக்கு அமிதாப் உதவி செய்கிறார். அவருடைய உதவியால் தனுஷ் பெரிய ஸ்டாராக மாறுகிறார் என்பது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் அமிதாப்பச்சன் குடிகாரன் கேரக்டரில் வருவதாகவும் எப்போதும் பாட்டிலும் கையுமாய் இருப்பதுபோல் இவரது கேரக்டர் சித்தரிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply