shadow

பாகிஸ்தான் அணிக்காக சச்சின் விளையாடியது உண்மையா?

sachinஇந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இந்தியாவுக்கு பல வெற்றிகளை குவித்த தந்தை மாபெரும் கிரிக்கெட் விளையாட்டு வீரர். ஆனால் இவரது முதல் தனது முதல் போட்டியை பாகிஸ்தானுக்காகத்தான் விளையாடியுள்ளார் என்று தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த 1989ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சச்சின் அறிமுகம் ஆனதற்கு இரண்டு வருடங்களுக்கு முன் பாகிஸ்தான் அணிக்காக சச்சின் விளையாடி உள்ளதாக அவரது வாழ்க்கை வரலாறு புத்தமகான ‘பிளேயிங் இட் மை வே’ என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்பையில் நடந்த கண்காட்சிப் போட்டியில் விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு மாற்று பீல்டர்கள் இல்லாததால் அப்போதைய பாகிஸ்தான் அணியின் கேப்டன் இம்ரான்கான், களத்தின் அருகில் சுற்றித்திரிந்த 14 வயது சச்சினை அழைத்து பீல்டிங் செய்ய வைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த போட்டியில் சச்சின் மட்டுமின்றி மேலும் இரு சிறுவர்களும் சச்சின் போல பீல்டிங் செய்ததாகவும் அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply