shadow

அரசியலில் குதிக்கின்றார் ஆர்.ஜே.பாலாஜி

திரைத்துறையில் இருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலர் அரசியலில் குதித்து வரும் நிலையில் காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் அரசியலில் குதிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி தனது டுவிட்டரில் அடிக்கடி சமூக கருத்துக்களை கூறி வருபவர். காவிரி பிரச்சனை உள்பட பல பிரச்சனைகளுக்காக தொலைக்காட்சி விவாதங்களிலும் கலந்து கொண்டவர். இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜி தற்போது அரசியலில் களமிறங்க இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு கூடியுள்ளது.

சென்னையில் உள்ள ஒருசில இடங்களின் சுவர்களில், மே 18-ஆம் தேதி இளைஞர்களை வழிநடத்த தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி அவர்களே வருக! வருக!! வரவேற்கிறோம். மே 18-ஆம் தேதி அறிவுப்புக்காக காத்திருக்கிறோம் என்று வரையப்பட்டிருந்தது. ஆனால் இந்த சுவர் விளம்பரம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி இதுவரை விளக்கம் எதுவும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply