ஸ்ரீதேவியை காதலித்த பிரபல இயக்குனர். பரபரப்பு தகவல்
sridevi2
கடந்த 80 மற்றும் 90ஆம் ஆண்டுகளில் தமிழக ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை ஸ்ரீதேவி பின்னர் பாலிவுட் சென்று இந்தியாவின் கனவுக்கன்னியாக மாறினார். அவர் புகழின் உச்சத்தில் இருந்தபோது போனிகபூரை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார். ஸ்ரீதேவியின் ரிட்டயர்மெண்ட் ரசிகர்களை மட்டுமின்றி பல திரையுலக பிரமுகர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில் பிரபல தெலுங்கு பட இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஸ்ரீதேவி மீது தனக்கு இருந்த ஈர்ப்பு குறித்து தனது சுயசரிதை நூலான “கன்ஸ் அன்ட் தைஸ்” என்ற புத்தகத்தில் விரிவாக தெரிவித்துள்ளா.

அந்த சுயசரிதையில், “ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரை எக்காரணத்திற்காகவும் மன்னிக்கவே மாட்டேன் என்றும் ஏனெனில், விண்ணில் இருந்து இறங்கி வந்த ஒரு தேவதையை சமையலறையில் வேலை செய்ய விட்டுவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுயசரிதையில் ஸ்ரீதேவியைப் பற்றி குறிப்பிட்டுள்ளவற்றை “ஒர் காதல் கடிதம்” என்று கூறியுள்ள ராம்கோபால் வர்மா, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் மீது ஈர்ப்பு வரலாம். அந்த உணர்வை நீங்கள் அனுபவிக்கலாம். இவையெல்லாம் ஒரு போதை போன்றது தான் என்று ஸ்ரீதேவி பற்றியும், அவருக்கும் ஸ்ரீதேவிக்குமான அன்பு பற்றியும் அக்காதல் கடிதத்தில் எழுதி நிறைத்துள்ளார் ராம்கோபால்வர்மா.

இரண்டு இந்திப் படம் மற்றும் இரண்டு தெலுங்கு படம் என  ராம்கோபால்வர்மா இயக்கத்தில் நான்கு படங்களில் ஸ்ரீதேவி நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் ஸ்ரீதேவி 2 தெலுங்கு படங்கள் மற்றும் 2 இந்தி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Chapter on Sridevi in Ram Gopal Varma‘s Autobiography is a ‘Love Letter’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *