shadow

சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு தகுதியில்லாதவரா ரஜினி? ரசிகர்கள் கொதிப்பு
rajini
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் குறித்து பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறிய சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனங்களை டுவிட்டர், ஃபேஸ்புக் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலை ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில் “மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கும் இந்த மனிதர், நட்சத்திர அந்தஸ்துக்கு அழகு முக்கியம் என்ற எண்ணத்தையே தூள் தூளாக்குகிறார். பார்க்க நன்றாக இருப்பவர் அல்ல, சிக்ஸ் பேக்ஸ் கிடையாது, சரியான உடலமைப்பும் கிடையாது, மொத்தம் இரண்டரை நடன அசைவுகள் தான் தெரியும்.

உலகில் வேறெங்கும் இப்படியிருக்கும் ஒருவர் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது. இவர் கடவுளுக்கு என்ன செய்தார், கடவுள் இவருக்கு இப்படி ஒரு வாழ்க்கையை தந்துள்ளார் என்பது தெரியவில்லை. ரசிகர்களுக்கு திரைப்படத்தில் என்ன பிடிக்கும் என்பதை ஒருவரும் கணிக்க முடியாது என்பதற்கு ரஜினி சார் தான் ஆகச்சிறந்த உதாரணம். உலகின் உயர்ந்த மனோதத்துவ நிபுணர்களும், ரசிகர்களின் இந்த ரஜினி பித்தினை விளக்க முடியாமல் குழம்பிப் போவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராம்கோபால்வர்மாவின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதேபோல் சமீபத்தில் பவன்கல்யாண் குறித்து அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாகியதை அடுத்து இனிமேல் பவன்கல்யாண் குறித்து டுவிட் செய்யப்போதில்லை என்று கூறினார். அதேபோல் விரைவில் ரஜினி குறித்தும் டுவீட் செய்ய மாட்டேன் என்று கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply