அதிமுகவில் இருந்து விலகுகிறாரா மதுசூதனன்? பெரும் பரபரப்பு

அதிமுக அவைச்செயலாளர் கட்சி தலைமை மீது அதிருப்தியுடன் இருப்பதால் அவர் கட்சியில் இருந்து விலகவுள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் ஆர்.கே.நகரில் மீனவ கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தபோது மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும், அமைச்சர் ஜெயகுமார் ஆதரவாளர்களுக்கும் மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவைத்தலைவர் மதுசூதனன் நேற்றிரவு திடீரென துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் வேலுமணியை சந்தித்து பேசினார்

மேலும் இன்று காலை முதல்வரை சந்தித்து பேசவிருப்பதாகவும், அதன்பின்னர் அவர் அதிமுகவில் இருந்து விலகும் முடிவை அறிவிக்கவிருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுகவில் இருந்து விலகிய பின்னர் அவருடைய அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *