shadow

rajiniரஜினியின் பெயரை அவரது சம்மந்தி கஸ்தூரிராஜா தவறாக பயன்படுத்தி ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக உயர்நீதிமன்றத்தில் ஒருவர் மனுதாக்க்கல் செய்துள்ளதாக வெளிவந்துள்ள திடுக்கிடும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலிவுட்டில் தயாராகி வரும் திரைப்படம் ஒன்றுக்கு “மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டதை எதிர்த்து ரஜினிகாந்த் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு வாங்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் டைட்டிலுக்கு உயர்நீதி மன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியுள்ளதை அடுத்து இந்த வழக்கின் விசாரணை நேற்று தொடர்ந்து நடைபெற்றது.,

இந்த வழக்கின் புதிய திருப்பமாக தன்னையும் பிரதிவாதியாக இணைத்துக் கொள்ள அனுமதி கோரி நிதி நிறுவனர் போத்ரா என்பவர் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ஹிந்தி திரைப்படத்தில் தனது பெயரை பயன்படுத்த ரஜினி தடை உத்தரவு பெற்றுள்ளார் என்றும் ஆனால், அவரது பெயரைப் பயன்படுத்தி, இயக்குநர் கஸ்தூரிராஜா தன்னிடம் ரூ.65 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியுள்ளதாகவும், ரஜினியின் சம்பந்தியே அவரது பெயரை தவறாகப் பயன்படுத்தி உள்ளதால் இந்த வழக்கில் தனது தரப்பு வாதத்தையும் கேட்க அனுமதிக்க வேண்டும் என போத்ரா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ரஜினி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “என்னைப் பற்றி படம் தயாரித்த பட நிறுவனத்துக்கு எதிராகத்தான் வழக்குத் தொடர்ந்துள்ளேன். அதற்கும், போத்ராவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரது மனு விசாரணைக்கு உகந்தல்ல.  இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கு, எனது பெயரைப் பயன்படுத்திக் கொள்ள எந்த அதிகாரமும், வாக்குறுதியும் அளிக்கவில்லை. அது குறித்து எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. எனவே, போத்ராவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Leave a Reply