shadow

‘காலா’ திரைப்படம் கர்நாடகத்தில் ரிலீஸ் ஆகுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதனால் கர்நாடகாவில் ரஜினியின் படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் உள்ளீட்டோர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ரஜினியின் ‘காலா’ திரைப்படம் அடுத்த மாதம் 7ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் இந்த படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகுமா? என்ற கேள்விக்குறி தற்போது எழுந்துள்ளது.

கர்நாடகாவில் தற்போது தேர்தல் முடிந்துள்ளதால் காலா படம் ரிலீசுக்குள் புதிய ஆட்சி அமைக்கப்பட்டுவிடும் என்றாலும் காலா படத்தை ரிலீஸ் செய்ய புதிய அரசு போதுமான ஒத்துழைப்பை தருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply