shadow

idli and coffeeபலரும் காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடிப்பார்கள். பிறகு குளித்து முடித்து டிபன் சாப்பிட்டு விட்டு உடனே காபி அல்லது டீ குடிப்பார்கள். ஆனால், இயற்கை வகுத்துள்ள உணவுத் திட்டத்தின்படி இந்த உணவு முறை சரியாக அமைவதில்லை.

காலையில் இட்லி சாப்பிடுகிறோம். அதில் உப்பு இருக்கிறது. உடனே ஒரு கப் டீ அல்லது காபி குடிக்கிறோம். அதில் பால் இருக்கிறது. உப்புடன் கூடிய இட்லியில் பாலுடன் கூடிய டீ அல்லது காபி சேரும்போது, அது ஒரு விஷப்பொருளாக மாறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.

ஆக, எது ஆரோக்கியத்தை தர வேண்டுமோ, அது விஷமாக மாறி உடலை உபாதைக்கு உள்ளாக்குகிறது. அதனால் இட்லியுடன் டீ அல்லது காபி குடிப்பதைவிட, மோர் குடிப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் மோர், இட்லியை வயிற்றில் கரைத்து, வேகமாகச் செரிக்க உதவுகிறது. 

Leave a Reply