‘தெய்வமகள்’ தொலைக்காட்சி தொடர் நடிகை மரணமா? அதிர்ச்சி தகவல்

கடந்த சில நாட்களாகவே சின்னத்திரை நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் சற்று முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘தெய்வமகள்’ தொடரில் நடித்து வரும் நடிகை ரேகா என்பவர் பலியானதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

ஆனால் இதுகுறித்து விசாரித்தபோது, விபத்து நடந்தது உண்மைதான் என்றும், ஆனால் விபத்தில் பலியானது ‘தெய்வமகள்’ ரேகா இல்லை என்றும் சென்னை அமிர்தா கல்வி நிறுவனம் உள்பட பல விளம்பரங்களில் நடித்த நடித்த ரேகாசிந்து என்பதும் தெரிய வந்துள்ளது.

சென்னையில் இருந்து பெங்களூருக்கு விளம்பரப்படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக நடிகை ரேகாசிந்து சென்று கொண்டிருந்தபோது, கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே ரேகாசிந்து பலியானார். காயமுடன் உயிர் தப்பிய டிரைவர் தலைமறைவாகிவிட்டதாகவும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *