shadow

Leader of Oppositionமக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து இன்னும் நான்கு நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவதற்கு குறைந்தபட்சம் 55 தொகுதிகளில் ஒரு கட்சி வெற்றி பெற்றிருக்கவேண்டும். ஆனால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்பட எந்த கட்சிக்கும் 55 தொகுதிகள் இல்லை. எனவே எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு வழங்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 44 தொகுதிகளும், அதிமுகவுக்கு 37 தொகுதிகளும் உள்ளது. எதிர்க்கட்சிக்கு தேவையான 55 தொகுதிகள் இல்லாவிட்டாலும் சபாநாயகர் நினைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கொடுக்க உரிமை உண்டு. இதுகுறித்து அட்டர்னி ஜெனரலிடம் கருத்துகேட்டபோது, அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று பேசிய சபாநாயகர், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவரை தனிப்பட்ட முறையில் நான் தேர்வு செய்ய விரும்பவில்லை. இது தொடர்பாக, அனைத்து சட்ட விதிமுறைகளையும், அட்டர்னி ஜெனரலின் கருத்தையும் கேட்க விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் சட்ட நடைமுறைகளை பின்பற்றி செயல்படுவேன். இதுதொடர்பாக, நான்கு நாள்களுக்குள் முடிவு செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply