shadow

இது வெறும் புலி இல்லடா…பாயும் புலி. விஜய்யை கலாய்த்தாரா ஆர்யா?

aryaஆர்யா மற்றும் விஷால் ஆகிய இருவரும் கோலிவுட் திரையுலகில் நெருங்கிய நண்பர்கள் என்பதை அனைவரும் அறிந்ததே. இருப்பினும் தனது பாயும் புலி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஆர்யாவை வரவேண்டாம் என விஷால் கேட்டுக்கொண்டார். விஷாலின் படவிழாவுக்கு வரும்பொதெல்லாம் ஆர்யா உணர்ச்சி வசப்பட்டு பேசும் வார்த்தைகள் சிலசமயம் எல்லை மீறி சர்ச்சைகளை ஏற்படுத்திவிடுவதால்தான் விஷால் அவ்வாறு கூறியதாக கூறப்படுகிறது.

இதற்கு ஒரு உதாரணமாக விஷாலின் ‘பூஜை’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஆர்யா, விஷாலின் பூஜை படத்துடன் அஜீத்தின் என்னை அறிந்தால், ஷங்கரின் ‘ஐ’ ஆகிய படங்கள் போட்டியிடவுள்ளதாக எழுந்த கருத்து குறித்து அவர் கூறியபோது ‘எவனா இருந்தாலும் விஷால் வெட்டுவான்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது அஜீத், விக்ரம் ரசிகர்கள்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று முன் தினம் ‘பாயும் புலி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஆர்யா கலந்து கொள்ளவில்லை எனினும் தன்னுடைய டுவிட்டரில் ‘இது வெறும் புலி இல்லடா…பாயும் புலி ஆடியோ ரிலீஸ்டா….இது கொட்டை எடுக்காத புலிடா….புரட்சித்தளபதியின் புலிடா…என்று கூறியுள்ளார். இது டுவீட் விஜய்யின் புலி படத்தை ஆர்யா கலாய்ப்பது போல் இருப்பதால் விஜய் ரசிகர்கள் ஆர்யாவுக்கு டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply