அதிமுக பக்கம் செல்வாரா அஜித்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவின் அனுதாபியாக இருந்தவர் அஜித் என்பது தெரிந்ததே. இருப்பினும் அவர் எந்த அரசியல் கட்சியிலும் சேருவதற்கு ஆர்வம் காட்டவில்லை

இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் அல்லது சட்டமன்ர தேர்தலுக்குள் ஒரு பெரிய நடிகரை அதிமுகவினர் இழுக்க திட்டமிட்டுள்ளதாகவும், அவர் அஜித் தான் என்றும் அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது

இதற்கு அச்சாரமாகத்தான் கடந்த 1ஆம் தேதி தனது டுவிட்டரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியதாகவும், அஜித் அரசியலுக்கு வருவதாக இருந்தால் அதிமுகவுக்குத்தான் வரவேண்டும் என்று மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் பாஜகவும் அஜித்தை வளைக்க முயற்சித்து வருவதாக தெரிகிறது.

ஆனால் அஜித்திடம் இருந்து வழக்கம்போல் எந்த ரியாக்சனும் இல்லை என்பதுதான் உண்மை. இருப்பினும் அதிமுகவினர் தொடர்ந்து அஜித்தை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *