இருமுகன்’ படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிப்பு

irumuganமுதன்முதலாக வித்தியாசமான இரண்டு வேடங்களில் நடிகர் விக்ரம் நடித்து வரும் ‘இருமுகன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சிங்கப்பூரில் நடைபெற்ற SIIMA விருது வழங்கும் விழாவில் இந்த படத்தின் தெலுங்கு டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் இந்த படம் ‘Inkokkadu’என்ற பெயரில் வெளியாகும்.

மேலும் இதே விழாவில் இந்த படத்தின் தெலுங்கு டீசர் வெளியானது. இந்த டீசரை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி வெளியிட்டார். இந்த விழாவில் கலந்து கொண்டவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டாவது முறையும் டீசர் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, பாலா, மனோ, பிரதாப் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ‘அரிமா நம்பி’ இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் பெரும் பொருட்செலவில் ஷிபு தமீன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பும் செய்கின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *