shadow

விக்ரம் நடித்த ‘இருமுகன்’ படத்தின் சென்சார் தகவல்

irumuganவிக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ’10 எண்றதுக்குள்ள’ திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது அவர் ‘அரிமாநம்பி’ இயக்குனர் ஆனந்த்சங்கர் இயக்கியுள்ள ‘இருமுகன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் நேற்று இந்த படம் சென்சாருக்கு சென்றது.

சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்துவிட்டு ‘UA’ சான்றிதழ் அளித்துள்ளனர். வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்த படத்திற்கு ‘UA’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ‘இருமுகன்’ திரைப்படம் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகையை பெறும் தகுதியை இழக்கின்றது. .

விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பி ராமையா, பாலா, மனோ, பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பெரும் பொருட்செலவில் ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply