shadow

images (1)

சபரி யாத்திரை: பயணப்பாதை தேவைகளை வேறு பையிலோ, பெட்டியிலோ போட்டு கையில் எடுத்துச் செல்லலாம்! எதற்காக இரு முடிச்சுகளாகக் கட்டி, தலைமீது  சுமந்து செல்லவேண்டும்.

மலைமீது பல இடங்களில் செங்குத்தாகவோ குறுகிய ஒற்றையடிப்பாதையிலோ ஏறவேண்டியிருக்கும். அந்த சமயத்தில் தலையைத் திருப்பிப் திருப்பி பார்ப்பது கவனத்தை திசைதிருப்பி விபத்தினை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதாலேயே இருமுடிப்பையினை தலைமீது தான் சுமக்க வேண்டும்  என்ற கட்டாயத்தை ஏற்படுத்தினார்கள். அப்படிச் சுமப்பதால் தலையை சட்டெனத் திருப்பிவிடாமல் பாதைமீது கவனம் செலுத்தி நேராக நடக்க   முடியும். இன்று பயணப்பாதை சீராக்கப்பட்டு வசதிகள் பல வந்துவிட்டாலும், மனதை ஒருமுகப்படுத்தி கவனம் திசைதிரும்பாமல் செல்ல இது  அவசியமாக இருக்கிறது. எல்லாமே மாறிவிட்டாலும் சபரிகிரி வாசனின் சன்னதி முன் இருக்கும் பதினெட்டுப் படிகள் செங்குத்தாக, குறுகலாக,  வழுக்கலாகவே இன்றும் இருக்கிறது. தொன்மை மாறாத தெய்வீகம் நிறைந்த அந்தப் படிகளில் ஏறும்போது ஐயனைத் தவிர வேறு எதுவும்  கவனத்தில் இருக்கக் கூடாது. அப்படி இருக்கவேண்டுமானால் இருமுடி பக்தர் தம் திருமுடியிலிருப்பது அவசியம்.

images (2)

இன்னொரு முக்கியமான விஷயம், சபரி யாத்திரையின்போது, சன்னதிக்குச் செல்லும் வரை, இருமுடியின் பின்புறப்பையில் இருப்பவை குறைந் துகொண்டே வரும். முன்புறம் இருப்பவை அப்படியே இருக்கும். இது, இறைவனை நெருங்க நெருங்க தலைகனம் குறைந்து, பக்தி மட்டுமே  நிறைந்திருக்கும் என்பதன் அடையாளம்!

Leave a Reply