மும்பை ரயில்களுக்கு முன்பதிவு ரத்து ஏன்?

ஐ.ஆர்.சி.டி.சி.,எனப்படும், ரயில் டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்யப்படும் இணையதளத்தின் பராமரிப்பு பணி காரணமாக, மும்பை வழித்தட ரயில்களில், இன்று( ஒருசில மணி நேரம், ‘டிக்கெட்’ முன்பதிவு செய்ய இயலாது’ என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.

ரயில்வே துறையை, ‘டிஜிட்டல்’ மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஐ.ஆர்.சி.டி.சி.,எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின், அதிகாரபூர்வ இணையதளம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இணையதளம் பராமரிக்கப்படும் சமயத்தில், டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்வது நிறுத்தப்படுவது வழக்கம். அத வகையில் இன்று நள்ளிரவு முதல் காலை, 4:15 மணி வரை இணையதளம் பராமரிக்கப்படுகிறது.

இந்த சமயத்தில், தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்து, மும்பை சந்திப்புக்கு செல்லும் வழித்தட ரயில்களில், டிக்கெட் முன்பதிவு, ரத்து செய்ய இயலாது என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *