shadow

indian-railways copyபாரத பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக கடந்த பிப்ரவரி மாதம் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக சரக்கு ரெயில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. மேலும் சாதாரண நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பயன்படுத்தும் பிளாட்பாரம் கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.10 என உயர்த்தப்பட்டது. மேலும் இந்த ரயில்வே பட்ஜெட்டில்  பயணிகள் சேவை கட்டணம் 12.36 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

பட்ஜெட்டில் உயர்த்தப்பட்ட இந்த சேவை வரி ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான சுற்றறிக்கை ரயில்வே வாரியத்தில் இருந்து அனைத்து ரயில்வே கோட்டங்களுக்கும் நேற்றிரவே அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஜூன் 1ஆம் தேதி முதல் புதிய சேவை வரி பயணிகளிடம் இருந்து வசூல் செய்யப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஜூன் 1ஆம்தேதி அல்லது அதற்கு பின் பழைய கட்டணத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து, மீதி தொகை வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சாதாரண பெட்டிகள் முதல் ஏ.சி. பெட்டிகள் வரை சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பெட்டிகளுக்கு ஒன்றரை மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி பெட்டிகளுக்கு ரூ.30 முதல் ரூ.100 வரை உயருகிறது. சேவை வரி உயர்வால் அனைத்து வகுப்பு ரெயில் கட்டணமும் அதிகரித்துள்ளதால் ரயில் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக ஏ.சி. சேர்கார், ஏ.சி. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, 3ஆம் வகுப்புகளுக்கு கட்டணம் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
 

Leave a Reply