அமெரிக்க பல்கலைக்கழகமாக மாறும் சதாம் உசேன் அரண்மனை

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் வாழ்ந்த ஆடம்பர அரண்மனை, அமெரிக்க பல்கலைக்கழகமாக விரைவில் மாறவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

ஈராக்கில் கடந்த 1979-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் சதாம் உசேன். அமெரிக்காவை எதிர்த்து அவரது நடவடிக்கைகள் இருந்ததால் அமெரிக்க ஆரசின் துணையுடன் கடந்த 2003-ம் ஆண்டு போருக்கு பின்னர் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மேலும் அதே ஆண்டில் பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேன் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் தூக்கில் போடப்பட்டு கொல்லப்பட்டார்

இந்த நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சதாம் உசேன் வாழ்ந்த அரண்மனைகளில் ஒன்று ரத்வானியா அரண்மனை. மிகவும் ஆடம்பரமான இந்த அரண்மனையில் தான் சதாம் உசேன் பெரும்பாலும் தனது குடும்பத்தினர்களுடன் வாழ்ந்தார். இந்த நிலையில் இந்த அரண்மனை விரைவில் அமெரிக்க பல்கலைக்கழகமாக மாறவுள்ளது. அமெரிக்க பல்கலைக்கு இந்த அரண்மனையை ஈராக் அதிகாரிகள் தேர்வு செய்து உள்ளதாக ஈராக் அரசுக்கு சொந்தமான ‘அல் சபா’ பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

இது குறித்து அரசு சொத்துக்கள் துறையின் தலைவரான அகமது அரல் ருபாயி கூறுகையில், “பாக்தாத்தில் உள்ள ரத்வானியா அரண்மனையை அமெரிக்க பல்கலைக்கழகம் அமைப்பதற்கு, மந்திரிசபையால் உருவாக்கப்பட்ட கமிஷன் முடிவு செய்து உள்ளது” என கூறினார்.

Iraq selects saddam hussan palace for US university

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *