shadow

சவுதி அரேபியா மன்னருக்கு ஈரான் மதத்தலைவரின் பயங்கரமான சாபம்
iran
சவுதி அரேபியா நாட்டில் ஷியா பிரிவு தலைவர் ஷேக் நிம்ர் அல் நிம்ர் என்பவருக்கு நேற்று முன்தினம் மரண தண்டனை நிறைவேற்றிப்பட்டது. இதற்கு ஈரான் நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் ஷியா பிரிவு மக்களின் மிகப்பெரிய தலைவராக மதிக்கப்படும் அயாத்துல்லா அஹமத் கடாமி என்பவர் சவுதி மன்னருக்கு கடுமையான சாபம் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அயாத்துல்லா அஹமத் கடாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, “சவுதி ஆட்சியாளர்களால் கொல்லப்பட்ட நிம்ர் அல் நிம்ரின் தூய்மையான இரத்தம் சவுதி ஆட்சியாளர்களின் ஆடைகளை கரைப்படுத்தி, அவர்களை வரலாற்று ஏடுகளில் இருந்து துடைத்தெறிந்துவிடும் எனபதில் எனக்கு சந்தேகமில்லை. வஞ்சகம்மிக்க சவுதி அரச குடும்பத்தின் பழக்கங்களின்படி நிம்ர் அல் நிம்ர் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு காரணமான சவுதி மன்னராட்சிக்கு எதிராக இஸ்லாமிய உலகம் வெகு தீவிரமாக கிளர்ந்தெழுந்து அவர்களை மண்ணோடு மண்ணாகிப் போகும் என தான் சாபமிடுவதாக தெரிவித்துள்ளார்.

சன்னி பிரிவினர் அதிகம் உள்ள சவுதி அரேபியாவை மன்னர் சல்மான் என்பவர் ஆட்சி செய்து வருகிறார். இந்த நாட்டில் வாழும் ஷியா பிரிவு மக்கள் அங்கு இரண்டாம்தர குடிமக்களைப் போல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சன்னி பிரிவினர்களின் இந்த நடவடிக்கைக்கு கடந்த பல வருடங்களாக ஷியா ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஷியா பிரிவு தலைவர் ஷேக் நிம்ர் அல் நிம்ருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதும் ஈரான் அரசு கடும் எச்சரிக்கை விடுத்தது. இதற்கு கடும் விலை கொடுக்க வேண்டி வரும் என்று ஈரான் கூறியிருந்த நிலையில் நேற்று அதிகாலை ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

Chennai Today News: Iranian cleric predicts fall of Saudi government over Shi’ite cleric’s execution

Leave a Reply