shadow

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப ஈரான் எதிர்ப்பு. டிரம்ப் பணிவாரா?

அமெரிக்க அதிபராக கடந்த வாரம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் முதல் வேலையாக அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப முடிவு செய்துள்ளார். மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்கவே இந்த பிரமாண்ட சுவர் என்றும், இதற்கு மெக்சிகோ நாடும் பாதி பணம் தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் மெக்சிகோ அதிபர் இந்த கோரிக்கைக்கு மறுத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக ஈரான் நாட்டின் அதிபர் ஹசன் ரவ்ஹானி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பல ஆண்டுகளுக்கு முன்பு பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டதை அவர்கள் (டிரம்ப்) மறந்து போனார்கள் போலும். நாடுகளுக்கு இடையே சுவர்கள் இருந்தால், அவை அகற்றப்பட வேண்டும். நாடுகளுக்கு இடையே தடுப்புச்சுவர் கட்டுவதற்கான நேரம் இது அல்ல என்று கூறியுள்ளார்

மேலும் ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு விசா வழங்க அமெரிக்கா தடை விதித்திருப்பது பற்றி ஹசன் ரவ்ஹானி கூறியபோது, ‘உலக நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணுசக்தி உடன்படிக்கை செய்து கொண்ட காலம் தொடங்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஈரான் கதவுகளை திறந்து வைத்துள்ளது என்றும் இதேபோல் மற்ற நாடுகளும் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply