shadow

மீண்டும் தாக்குதல் நடத்திய ஈரான்: பெரும் பதட்டம்

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஏற்கனவே ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில் இந்த தாக்குதலில் சுமார் 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது

இதனை அடுத்து ஈரான் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

ஈராக் விமானப்படைத் தளம் மீது அமெரிக்க வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் அமெரிக்க ராணுவம் மீது நான்கு ராக்கெட்டுகளை ஈரான் நாட்டின் இராணுவம் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த தகவலால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பதட்டமான சூழ்நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *