ஐ.பி.எல் கிரிக்கெட்: சென்னை, ராஜஸ்தான்அணிகள் அபார வெற்றி., அரையிறுதிக்கு தகுதி.

shadow

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் சென்னை மற்றும்  ராஜஸ்தான் அணிகள் வெற்றி பெற்றது.

முதலில் நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட 20 ஓவர்களில் சென்னை அணியின் அபார பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாத பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. பட்டேல் 32 ரன்களும், தவான் 25 ரன்களும், எடுத்தனர்.

பின்னர் 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி, 16.5 ஓவர்களில் 3 விக்கெட்ட்டுக்கள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டீபிளஸ்ஸிஸ் 55 ரன்களும், சுரேஷ் ரெய்னா 41 ரன்களும், தோனி 25ரன்களும் எடுத்தனர்.

இதேபோல் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

ராஜஸ்தான்        199/6  20 ஓவர்கள்

வாட்சன்        104
ரஹானே         37
கே.கே.நாயர்     16

கொல்கத்தா அணி:        190/9  20 ஓவர்கள்

யூசுப் பதான்        44
ரூஷ,             37
மோர்க்கல்        26
யாதவ்            24

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *