shadow

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர முடியுமா?

இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9,000 கோடி கடன் வாங்கி திருப்பி கட்டாமல் இங்கிலாந்து நாட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா சமீபத்தில் லண்டனில் கைது செய்யப்பட்டாலும் சில மணி நேரங்களில் லண்டன் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்மல்லையாவை நாடு கடத்தும் கோரிக்கை மீது லண்டன் கோர்ட்டில் விசாரணை நடந்து வரும் நிலையில் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் இறுதி முடிவு எடுக்கும் வரை இந்த விசாரணை தொடரும் என்றும் ஆனால் அதே நேரத்தில் அவரை  நாடு கடத்தப்படும் விஷயத்தில், அனைத்து மேல்கோர்ட்டுகளிலும் இறுதியாக இங்கிலாந்தின் சுப்ரீம் கோர்ட்டு வரை விஜய்மல்லையாவால் மேல்முறையீடு செய்ய முடியும் என்றும் சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கபட வேண்டும் என்பதில் மத்திய அரசு அரசு உறுதியாக உள்ளதால் மத்திய அரசு இந்த விஷயத்தில் தீவிர அக்கறை செலுத்தி வருகிறது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், மல்லையாவை இந்தியா கொண்டுவர எல்லாவிதமான ஏற்பாடுகளும் சிறப்பாக செயல்படுகின்றன. அவரை இந்தியாவிற்கு அனுப்பும் முடிவு இங்கிலாந்து நீதித்துறை நடவடிக்கையுடன் தொடர்புடையது. ’ என்று கூறினார். இந்த நிலையில் விஜய்மல்லையா வரும் மே 17ம் தேதி லண்டன் ஜோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply