9

உலக அளவில் துணிச்சல் மிக்க பெண்களுக்கு வழங்கப்படும் சர்வதேஅ விருதான International Women of Courage Award என்ற விருதுக்கு இந்தியாவின் லட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா விருதை வாஷிங்டன் நகரில் நடக்கவிருக்கும் ஒரு விழாவில் விரைவில் வழங்குவார்.

கடந்த 2005ஆம் ஆண்டு டெல்லியில் கான் மார்க்கெட் என்ற பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த லட்சுமி மீது ஆசிட் வீசப்பட்டது. அதில் லட்சுமியின் முகம் படுகோரமாக மாறியது. ஆனால் லட்சுமி தன்னம்பிக்கையை கைவிடாமல் துணிச்சலுடன் தனது கோரமான முகத்தை வெளியுலகிற்கு காட்டி, சட்டவிரோதமாக ஆசிட் விற்பதை தடை செய்ய தெருவில் இறங்கி போராடினார்.

சட்டவிரோதமாக விற்கப்படும் ஆசிட் விற்பனையை தடுக்க நாடு முழுவதிலும் இருந்து 27000 பேர்களிடம் கையெழுத்து வாங்கி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவர் தாக்கல் செய்த வழக்கால்தான் சுப்ரீம் கோர்ட் ஆசிட் விற்பனையை ஒழுங்குபடுத்த அரசுக்கு ஆணையிட்டது.

International Women of Courage Award என்று அழைக்கபடும் பெருமை மிகுந்த இந்த விருதை இதற்கு முன்னர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த Nasrin Oryakhil , பிஜி நாட்டை சேர்ந்த Roshika Deo, ஜார்ஜியா நாட்டை சேர்ந்த Bishop Rusudan Gotsiridze , கவுதமாலா நாட்டை சேர்ந்த Iris Yassmin Barrios Aguilar , மாலத்தீவை சேர்ந்த Fatimata Toure, சவுதி அரேபியாவை சேர்ந்த Maha Al Muneef, ஆகிய பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply