விவேகம் படத்தில் இண்டர்நேஷனல் தரத்தில் டைட்டில் டிராக்: விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி

அஜித் நடித்த ‘விவேகம்’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் குறித்த செய்திகள் தினமும் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் கூறியதாவது, ‘அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் டைட்டில் டிராக்கை கேட்கும் அதிர்ஷ்டம் சமீபத்தில் கிடைத்தது. கண்டிப்பாக இது ஒரு சர்வதேச தரம் வாய்ந்த டிராக் தான் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த டிராக்கை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், அனிருத்துக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ‘விவேகம்’ டைட்டில் டிராக் குழு குறித்த தகவல் சமூக இணையதளத்தில் வெளிவந்துள்ளது. அனிருத், ராஜகுமாரி மற்றும் விவியன் டிவைன் ஆகியோர் இந்த டைட்டில் டிராக்கின் குழுவினர் என புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளிவந்துள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *