shadow

dog_showமெட்ராஸ் கெனைன் கிளப் சார்பில், சர்வதேச நாய்கள் கண்காட்சி நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்தக் கண்காட்சி நாளை செப்.14 வரை நடைபெறும். காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ள கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம்.

முதல் நாளான நேற்று காலை ஜெர்மன் ஷெப்பர்டு, டாபர்மேன், கிரேட் டேன்ஸ், ராட்வில்லர்ஸ் ஆகிய ரக நாய்களுக்கு கட்டளைகளுக்கு கீழ்படியும் சோதனை நடத்தப்பட்டது. இதில் வேகமாக ஓடுதல், பந்தைத் தாவிப் பிடித்தல் உள்ளிட்ட உரிமையாளர்கள் கட்டளைப்படி செயல்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்தன.

அதைத் தொடர்ந்து நாய்களுக்கான அழகுப் போட்டி நடைபெற்றது. அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் வான்டிவார், ஜெர்மனைச் சார்ந்த ஆண்டன் ஸ்பின்ட்லர் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் கலந்துகொண்டு நாய்களின் சுறுசுறுப்பு, கண்காணிப்பு, பராமரிப்பு உள்ளிட்டவற்றை மதிப்பீடு செய்து சிறந்த நாய்களைத் தேர்ந்தெடுத்தனர்.

முதல்நாள் என்பதால் 10 இனங்களைச் சேர்ந்த நாய்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. 2-ஆம் நாளான இன்று ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு, புல்டாக், பக், மினியேச்சர் பின்ஸார், பொமேரியன், அகிடா உள்பட 50 இனங்களுக்கும் மேற்பட்ட நாய்கள் கண்காட்சியில் பங்கேற்கவுள்ளதாக மெட்ராஸ் கெனைன் கிளப் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நாளை நடைபெறும் இறுதிநாள் விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டு வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்குகிறார்.

Leave a Reply