shadow

துக்க வீடுகளில் நூதன மோசடி: விழிப்புணர்வுடன் இருக்க எச்சரிக்கை

தென்மாவட்டங்களில் தற்போது துக்க வீடுகளில் விநோதமான மோசடிகள் நடந்து வருவதாகவும் இதுகுறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அஞ்சலி போஸ்டர்களை பார்க்கும் மோசடி பேர்வழிகள், அவர்களுடைய வீட்டிற்கு டிப்டாப் உடையணிந்து தாங்கள் இன்சூரன்ஸ் அலுவலகத்தில் இருந்து வருவதாக தங்களை அறிமுகம் செய்து கொள்கின்றனர்.

பின்னர் இறந்தவர் இன்சூரன்ஸ் செய்திருப்பதாகவும், அவற்றை பெற ஆதார் கார்டு, ரேசன் கார்டு மற்றும் ரூ.10,000 வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி வாங்கி சென்றுவிடுகின்றனர்.

பின்னர் அந்த பக்கமே திரும்பி போவது கிடையாது. அவர் கொடுத்த விசிட்டிங் கார்டில் உள்ள முகவரிக்கு சென்று பார்த்தால் அங்கு அதே பெயரில் இன்னொருவர் வேலை செய்து கொண்டிருப்பதும் அவருக்கும் இந்த மோசடிக்கும் எந்தவித சம்பந்தமும் இருக்காது என்பதும் தெரியவரும். எனவே வீட்டிற்கு யாராவது இன்சூரன்ஸ் தருவதாக சொல்லி பணம் கேட்டால் சுதாரிப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது

 

Leave a Reply