shadow

jothilakshmiதெலுங்கில் நடிகை சார்மி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ஜோதி லட்சுமி படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த படத்தின் ஸ்டில்ஸ்கள் ஏற்கனவே படு கிளாம்ராக இருப்பதாக எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் அழைப்பிதழ் ஒரு பெண்ணின் முதுகுப்புறம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் அழைப்பிதழை பிரித்து பார்க்க வேண்டுமெனில் ஜாக்கெட்டின் பின்புறம் அவிழ்ப்பதைப் போல் பிரிக்க வேண்டும். இந்த அழைப்பிதழ் டிசைன் காரணமாக பல பெரும்புள்ளிகள் இசை விழாவில் பங்கு பெறுவதை தவிர்த்ததாக கூறப்படுகிறது.

இது சார்மிக்கு சற்றே சங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது. மேலும் படம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் அதற்காக இப்படியா அழைப்பிதழ் என தெலுங்கு சினிமா பல்லை நரநரக்கத் துவங்கியுள்ளது. ஏற்கனவே சார்மியின் ஃபோட்டோ ஷூட் ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது தற்போது இது வேறு இணைந்துள்ளது.

Leave a Reply